தேனி : 72 – வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் திரு.K.ரமேஷ், அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். உடன் காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி.இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.சஜூகுமார் அவர்கள் தலைமையில் காவல் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையில் 10 வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்த 69 காவல்துறையினருக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்த ஆறு காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி