ஊரடங்கில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறையினருடன் ஆலோசனை

Admin
0 0
Read Time8 Minute, 21 Second
தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக தூத்துக்குடி நகர வணிகம் மற்றும் வர்த்தக சங்க வியாபாரிகளுடன் ராஜ் மஹாலில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தற்போது கட்டுப்பாடுகள் விதித்து, இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதை தொடர்ந்து இன்று (19.04.2021) தூத்துக்குடி ராஜ் மஹாலில் தூத்துக்குடி வணிகர்கள் சங்க வியபாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக இன்று ராஜ் மஹாலில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை (20.04.2021) முதல் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது, அதன்படி தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 09.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும், முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரையிலும், மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது என்றும், அதே போன்று முழு ஊரடங்கு நாட்களில் அத்தியவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறைச் சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படுகிறது.
ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம், அத்தியவாசியப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்ளுக்கு மிகாமல் கலந்து கொள்வதில் எந்த விதமான தடையுமில்லை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றிற்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், திரையங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கபடமாட்டாது உட்பட தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும்,மேலும், உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிவதற்கும், சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கும், கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும் வலியுறுத்துங்கள். உங்களது கடைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக வைத்துகொள்ளுங்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எடுத்துரைத்துத்தார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி நகர மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் திரு. பாஸ்கரன், வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் திரு. பொன் தினகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் திரு. ராஜா, பர்னிச்சர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு. தர்மராஜ், பலசரக்கு கடைகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு. துரைராஜ், ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்க தலைவர் திரு. தெய்வநாயகம், கிளை சங்க தலைவர்கள் திரு. ஆனந்தசேகரன், திரு. சந்திரசேகர், மாரிமுத்து, திரு. பொன்பாண்டியன், திரு. பாலமுருகன், திரு. இசக்கி, திரு. நவமணி, திரு. தங்கராஜ், திரு. சுப்பிரமணியன், திரு. சின்னதணிகம், திரு. முனியதங்கம், திரு. நடராஜன், திரு. பெரியசாமி, திரு. ரத்தினகுமார், திரு. சுரேஷ்பாபு, திரு. செல்வராஜ், திரு. மீராசா, திரு. வேல்சாமி, திரு. பொன்னையா, திரு. சுரேஷ், திரு. பாண்டியன், திரு. பிரபாகரன், திரு. பக்கிள்துரை, திரு. சரவணன், திரு. ராஜேஷ், திரு. தங்க கணேஷ், திரு. ஜெயபிரகாஷ் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி, உதவி ஆய்வாளர் திரு. முருகபெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நோய் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய ராணிப்பேட்டை காவல்துறையினர்

909 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.திரு.ரா.சிவகுமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami