இனி ஞாயிறு முழு ஊரடங்கு; இரவு நேர ஊரடங்கு அமல் : முழு விவரம்

Admin
0 0
Read Time3 Minute, 27 Second

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்!
மே 5-ம் தேதி தொடங்கவிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு. தேதி பின்னர் அறிவிக்கப்படும். செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும்.

 • தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.
 • தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.
 • சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் & வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாடுகளுக்கும் தடை.
 • அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் அனைத்து நாட்களும் பொதுமக்கள் செல்ல தடை.
 • கல்லூரி & பல்கலைக் கழக தேர்வுகள் இணைய வழியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
 • கல்லூரி & பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணையவழி வகுப்பு நடத்த அறிவுறுத்தல்.
 • விதிமுறைகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 • ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும்.
 • இரவு நேர ஊரடங்கின் போது தனியார் / பொது போக்குவரத்து & ஆட்டோ & டாக்ஸி அனுமதி இல்லை.
 • மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ & டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும்.
 • அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி.
 • தனியார் நிறுவன இரவு காவல் பணியில் ஈடுபடுவோர் வீட்டிலிருந்து பணி இடத்திற்கு சென்று திரும்ப அனுமதி.
 • பெட்ரோல் & டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.
 • இரவு ஊரடங்கு அமலாகும் 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் ஓடாது.
 • ரயில் & விமான நிலையங்களுக்கு டாக்ஸி அனுமதிக்கப்படும் என்பதால் ரயில் & விமானங்கள் வழக்கம் போல இயங்கும்.
 • திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேரும் பங்கேற்க அனுமதி.
 • நீலகிரி , கொடைக்கானல் , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் & வெளியூர் பயணிகள் செல்ல தடை.
 • பூங்கா & உயிரியல் பூங்கா & அருங்காட்சியகங்கள் அனைத்து நாட்களிலும் செயல்பட அனுமதி இல்லை.
 • முழு ஊரடங்கு , ஞாயிற்றுக்கிழமைகளில் உணவகங்களில் பார்சல்கள் மட்டுமே அனுமதி.

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (செவ்வாய்) காலை முதல் அமுலாகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் தடுக்க வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

388  திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  திருநெல்வேலி மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami