இன்றைய சென்னை கிரைம்ஸ் 20/03/2021

Admin
0 0
Read Time10 Minute, 24 Second

1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆறு (எ) அரவிந்த் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் சிறையிலடைப்பு

சென்னை,செங்குன்றத்தைச் சேர்ந்த ஆறு (எ) அரவிந்த், வ/29, என்பவர் H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது ஒரு 1 கொலை வழக்கு 2 கொலை முயற்சி வழக்குகள், உட்பட 5 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஆறு (எ) அரவிந்த் 08.09.2020 அன்று வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி , தான் திருந்தி வாழப்போவதாகவும் , 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் , ஆறு (எ) அரவிந்த் 13.3.2021 அன்று H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லையில் ஒருவரை தாக்கி வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு , நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர், திருமதி. G.சுப்புலட்சுமி அவர்கள் குற்றவாளி, ஆறு (எ) அரவிந்திற்கு கு.வி.மு.ச. பிரிவு 110 ன் கீழ் நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து , மீதமுள்ள 175 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார் . அதன்பேரில் , குற்றவாளி ஆறு (எ) அரவிந்த் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.


சென்னையில் பல்வேறு பகுதிகளில் முதியோர்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை பறித்தவர், தண்டையார்பேட்டை காவல் குழுவினரால் கைது.

பழையவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரச்சின்னம்மாள், வ/65, என்பவர் கடந்த 15.03.2021 அன்று தண்டையார்பேட்டை மார்கெட், தாண்டவராயன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த நபர் மேற்படி வீரச்சின்னமாளிடம் நலம் விசாரிப்பது போல நடித்து, அவரிடமிருந்து 7 சவரன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து வீரச்சின்னாம்மாள் H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி சிவா (எ) சிவ குமார், வ/41, கோடம்பாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 16.5 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அமைந்தகரை பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவான அந்தோணி ( எ ) சொரி அந்தோணி என்பவர் K-3 அமைந்தகரை காவல் குழுவினரால் கைது- 1 ஆட்டோ கைப்பற்றப்பட்டது

கடந்த 26.02.2021 அன்று அமைந்தகரை,பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, வ/45 மற்றும் அவரது மகள் மோனிகா வ/24 என்பவர்கள் வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு நபர்கள் கத்தியுடன் வீட்டில் நுழைந்து கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தொடர்பாக K-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயந்தி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இந்நிலையில் K-3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.அந்தோணி குமார் வ/30, புளியந்தோப்பு 2.பாலாஜி வ/23, ஓட்டேரி 3.செல்லப்பன், வ/49, எழும்பூர் ஆகிய மூவரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர் , மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளி அந்தோணி (எ) சொரி அந்தோணி, வ/44, பெரம்பூர் என்பவரை இன்று 18.03.2021 கைது செய்து, அவரிடமிருந்து 1 ஆட்டோ கைப்பற்றப்ட்டது.மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (எ) ராகுல் என்பவர் R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் குழுவினரால் கைது . 3 சவரன் தங்க சங்கிலி கைப்பற்றப்பட்டது.

சென்னை , இராமபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தாலம்மாள் , வ / 70 , என்பவர் கடந்த 15.3.2021 அன்று மாலை இராமபுரம் , நேரு நகர் , காளியப்பன் தெரு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது , 2 நபர்கள் முத்தாலம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து முத்தாலம்மாள் R – 10 MGR நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , வழக்குப் பதிவு செய்யப்பட்டது . R – 10 MGR நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி சஞ்சய் ( எ ) ராகுல் , வ / 20 , நுங்கம்பாக்கம் என்பவரை கைது செய்தனர் . அவரிடமிருந்து திருடுபோன 3 சவரன் தங்க சங்கிலி கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தலைமறைவாகியுள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

மணலி புதுநகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காரில் கடத்திச் சென்று ரூ.3 லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி அப்துல் மாலிக் ( எ ) பாஷா ( எ ) சாகுல் அமீது என்பவர் M-7 மணலி புதுநகர் காவல் காவல் குழுவினரால் கைது

சென்னை , மணலி புதுநகரைச் சேர்ந்த பாலமுருகன், வ/43, என்பவர் 22.01.2021 அன்று அவருக்கு தெரிந்த அசோக்குமார் என்பவர் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச வேண்டும் என காரில் அழைத்துச் சென்று அசோக்குமார் மற்றும் அவரது 2 நண்பர்கள் சேர்ந்து பாலமுருகனிடம் பணம் ரூ .5 லட்சம் உடனடியாக தர வேண்டும் எனவும் , இல்லையெனில் கொலை செய்துவிடுவதாகவும் கூறி பாலமுருகனை மிரட்டி பாலமுருகன் ரூ .3 லட்சம் பெற்றுக் கொண்டு சற்றுதொலைவில் பாலமுருகனையும் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது தொடர்பாக, பாலமுருகன், M-7 மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து M-7 மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி கடத்திலில் ஈடுபட்ட அசோக் குமார், வ/38, மணலி என்பவரை 26.02.2021 அன்று கைது செய்தனர். இந்நிலையில் காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான அப்துல் மாலிக் ( எ ) பாஷா ( எ ) சாகுல் அமீது, வ/25, திருவொற்றியூர் , என்பவரை 17.3.2021 அன்று கைது செய்து, அவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய Hyundai Accent கார் கைப்பற்றுதல் செய்யப்பட்டு அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆா்.எஸ்.புரத்தில் ரூ.9.65 லட்சம் பறிமுதல்

629 கோவை: கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.9.65 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami