இன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021

Admin

அனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு

கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த பகுதியில் ரோந்து சென்ற போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி பார்த்தார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாக முகமது சானவாஸ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவையில் 500 கிராம் தங்கம் மோசடி நகை தொழிலாளிக்கு வலைவீச்சு

கோவை கவுண்டம்பாளையம் டி வி எஸ் நகரைச் சேர்ந்தவர் சுப்ரட்டாபாரிக் ( வயது 45)   நகைத் தொழில் செய்து வருகிறார் இவர் கோவை ஆர் எஸ் புரம் தியாகி குமரன் வீதியில் நகை பட்டறை வைத்துள்ள மேற்கு வங்காளத்தை சேர்ந்த டோபாஸ் சமந்தா என்பவரிடம் 500 கிராம் தங்கம் கொடுத்து கம்மல்  செய்து தருமாறு கூறியுள்ளார் . 2 மாதம் ஆகியும் கம்மல்  செய்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் டோபாஸ் சமந்தா திடீரென்று மாயமாகி விட்டார் இதுகுறித்து சுப்ரட்டா பாரிக் ஆர் எஸ் புரம்  குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த நகை தொழிலாளி சமந்தாவை  தேடிவருகிறார்கள்.


கோவையில் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது

கோவை சவுரிபாளையம் தேர் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(வயது 36). இவர் நேற்று அங்குள்ள பிருந்தாவன் நகர் எஸ் ஐ எச். எஸ் காலனி ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த 2 ஆசாமிகள் அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்கள் வைத்திருந்த   துப்பாக்கி (ஏர் பிஸ்டல்)  மற்றும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 1300 ரூபாயைகொள்ளை அடித்தனர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து  நாகராஜன் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பீளமேடு விமான நிலையம் பக்கம் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்த ரவி என்ற வியாசர்பாடி ரவி (வயது 33)  உடையாம்பாளையம் அசோக் வீதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்(வயது 23) ஆகியோரை இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து துப்பாக்கி,  ஒரு கத்தி கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.1300 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை அருகே ஜன்னலை உடைத்து வீட்டில் புகுந்து மரம் நபர் திருட்டு

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 63) விவசாயி. நேற்று இவரது வீட்டில் நள்ளிரவு வரை டிவி பார்த்துவிட்டு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மர்ம நபர் அவரது வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து வீட்டினுள் புகுந்து அங்கிருந்த டிவி, கைக்கடிகாரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.  இதுகுறித்து தங்கராஜ் ஆலாந்துறை போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்


Leave a Reply

Your email address will not be published.

Next Post

1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்

334 மதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452