“நிவர் புயல்” மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் நியமனம்

Admin
2 0
Read Time2 Minute, 38 Second

சென்னை: நிவர் புயல் மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு காவல் துறை உயர் அதிகாரிகளை நியமித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னைக்கு செயலாக்க பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் திரு. A.K. விஸ்வநாதன், இ.கா.ப, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டம் வாரியாக கீழ்கண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  1. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு காவல் துறை தலைவர் T.S. அன்பு, இ.கா.ப, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அவர்களும்

  2. திருவள்ளூர் மாவட்டத்திற்கு இரயில்வே பிரிவு காவல் துறை தலைவர் V. வனிதா, இ.கா.ப., அவர்களும்,

  3. விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிற்சி பிரிவு காவல் துறை துணை தலைவர் M. சத்ய பிரியா, இ.கா.ப  அவர்களும்,

  4. கடலூர் மாவட்டத்திற்கு வடக்கு சரக காவல் துறை தலைவர் P. நாகராஜன், இ.கா.ப., அவர்களும்,

  5. திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயிற்சி பிரிவு காவல் துறை தலைவர் திரு. M.C. சாரங்கன், இ.கா.ப., அவர்களும்,

  6. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை துணை தலைவர் R. லலிதாலக்ஷ்மி, இ.கா.ப., அவர்களும்,

  7. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு காவல் துறை துணை தலைவர் தலைமையகம் P.K. செந்தில்குமாரி, இ.கா.ப., அவர்களும்,

  8. திருவாரூர் மாவட்டத்திற்கு ஆயுத பிரிவு காவல் துறை தலைவர் திரு. R. தமிழ்சந்திரன், இ.கா.ப., அவர்களும்,

  9. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய சரக காவல் துறை தலைவர் திரு. H.M. ஜெயராமன், இ.கா.ப., அவர்களையும் கண்காணிப்பு  அதிகாரிகளாக நியமித்து தமிழக காவல் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காணாமல் போன (JCB)ஜேசிபி, துரிதமான முறையில் செயல்பட்ட காவல்துறை

611 திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறையினர் திருடப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான ஜேசிபி எந்திரத்தை கண்டுபிடித்து திருடியவர்களையும் கைது செய்துள்ளனர். JCB இயந்திரம் திருட்டு போனதாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami