காவலர் வீரவணக்க நாள் – இராணிப்பேட்டை SP அஞ்சலி..!

Admin
0 0
Read Time2 Minute, 29 Second
இராணிப்பேட்டை : 1959 ஆம் ஆண்டு, இதே நாளில் Indochina பகுதியில் HOT SPRING என்ற இடத்தில, சீனா இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படை (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்தில் இருந்த்து, பதினாறாயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நாம் இன்று நினைவு கூர்கிறோம்.
கடற்கரையானாலும், பனிமலை சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. Lord Tennyson-ன் வார்த்தைகளில் சொல்ல போனால்,
“Theirs not to reason why
Theirs not to make reply
Theirs but to do and die”
உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நன் மடிய தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவல் குடும்பத்தினர் எண்ணிக்கை 264. மடிந்த இவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீரத்தியகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம்.
இந்நாளில் பணியின் பொது உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வீரவணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களும், NAVY, HOME GUARDS ஆய்வாளர்களும், காவல் உதவி ஆய்வாளர்களும், காவலர்களும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்


 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க தினம் !

796 தேனி : லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami