தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Admin
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.16 பேரில் 9 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 அந்த உத்தரவில்,
  • சென்னை காவல்துறை நிர்வாக ஐஜியாக ஆர். தினகரன் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • வித்யா ஜெயந்த்குல்கரனி  காவல்துறை தலைமையக ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • சென்னை உளவுத் துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்படுள்ளார்.
  • கரூர் காகித நிறுவன கண்காணிப்பு ஐஜியாக சந்திரசேகர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • ஓம்பிரகாஷ் மீனா  சென்னை குற்றவியல் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தென்காசி ஏஎஸ்பி ஷாஷாங் சாய் சென்னை பூக்கடை துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருச்சி ஐஜியாக மஞ்சுநாதா டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை ஐஜியாக இருந்த அமரேஷ் புஜாரி மனித உரிமை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஆவின் ஐஜியாக இருந்த ரவி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜெயந்த் முரளி தமிழ்நாடு போக்குவரத்து திட்டக் குழு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பதவி உயர்வு பெற்ற அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அவர்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது செய்தியாளர்
குடந்தை.ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடரும் காவலர்கள் தற்கொலைகள், கண்டு கொள்ளுமா தமிழக அரசு !

47 தாங்க முடியாத பணிச்சுமை.. மனம் உடைந்த ஆயுதப்படை போலீஸ் ‘துப்பாக்கியால் சுட்டு தற்கொலை’  இப்போ தான் போலிசுக்கு எதுக்கு துப்பாக்கி கொடுத்துருக்காங்கன்னு தெரியுது.எதிரிகளை சுட அல்ல.’நாங்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452