24 லட்சம் மதிப்புள்ள தங்கக் கடிகாரம் அபேஸ் நூதன முறையில் மோசடி

Admin

மதுரை : மதுரையில் மதுரை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து ரூபாய் 24 லட்சம் மதிப்புள்ள தங்கக்கடிகாரங்களை நூதன முறையில் மோசடி செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை வள்ளுவர் காலனி ஜெ.என். நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் இளங்கோ 60 . இவர் இந்த முகவரியில் கைக்கடிகாரம் விற்பனை மற்றும் ஷோரூம் நடத்தி வருகிறார் .இவருக்கு டெலிபோனில் பேசிய மர்ம நபர் தாங்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் அவர்களுக்கு சில தங்க கடிகாரங்கள் விலைக்கு வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கான மாதிரிகளை கொண்டு வந்து காட்டும்படிகேட்டிருக்கின்றனர் .இவர்கள் பேச்சை நம்பிய அந்த கடையின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் ரூபாய் 23 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள தங்க கடிகாரங்களை அந்த ஓட்டலுக்குஅவர்களுக்கு கொண்டு சென்றுள்ளனர் .முதல் அறையில் அதனை பார்த்த அந்த நபர் மற்றொரு அறையில் தங்கியிருக்கும் முதலாளியிடம் காட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு அந்த 23 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 12 தங்ககடிகாரங்களை எடுத்துச் சென்றவர்கள் அங்கிருந்தபடி மாயமாகிவிட்டனர்.பின்னர் தேடிப்பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை இந்த நூதன மோசடி தொடர்பாக கைக்கடிகார நிறுவனத்தின் உரிமையாளர் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

E-Mail-ல் வரும் சம்பவங்கள் ! அடுத்தடுத்த திருப்பங்கள் ! போலீசாரை அதிரவைத்த ஹேக்கிங் ?

619 உத்தரபிரதேசத்தில் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்டுகள் கொண்ட ஹேக்கிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விசாரணை செய்த போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த சம்பவம். உத்தரபிரதேசத்தின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452