அரக்கோணம் காவல்துறை குடும்பத்தினர் கொண்டாடிய பொங்கல் விழா, அரக்கோணம் MLA பங்கேற்ப்பு

Admin
0 0
Read Time2 Minute, 9 Second

ராணிப்பேட்டை : பொங்கல் திருநாளன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல்துறையினர் சார்பாக, பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரக்கோணம் காவலர் குடியிருப்பில் ராணிப்பேட்டை மாவட்டம் எஸ்பி திரு.மயில்வாகனன் உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் தலைமையில், அரக்கோணம் டவுன் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் மற்றும் அரக்கோணம் காவல்துறையினரின் குடும்பங்கள் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா இரண்டு நாட்கள் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

இதில் இரண்டாம் நாளன்று (15.01.2020) இரவு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற, காவல்துறையினர் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அரக்கோணம் எம்எல்ஏ திரு.ரவி அவர்கள் தலைமை தாங்கினார். இந்த விழாவினை கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக தொகுத்து வழங்கி, விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைத்த, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா ஒளிபரப்பு ஊடக மாநில தலைவர் திரு.பாபு அவர்களை, அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் மற்றும் அரக்கோணம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் மற்றும் அரக்கோணம் நகர்மன்ற சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவி அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டுக்களை தெரிவித்தார்கள்.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பதி SP க்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர் தின வாழ்த்து

119 திருப்பதி : திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கஜா ராவ் பூபால், IPS அவர்களுக்கு ,போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில், காவலர்கள் தின வாழ்த்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami