“காவலன் செயலி”யின் பயன்கள் என்ன? பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

Admin
3 1
Read Time7 Minute, 52 Second

மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் உதவி புரிய, நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களை விரவான முறையில் இணையதளவசதி மூலமாக அனுப்பிவைக்கப்படும். காவல்துறையினரால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலி ‘தமிழ்நாடு காவல் துறையால்’ இணைந்து Amtex உடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்நுட்பங்கள்

“KAVALAN SOS” அவசர பாதுகாப்புச் செயலியானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. அவசரத் தேவையின் போது, அந்த கைப்பேசியை அதிரச் செய்தாலே, காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்றும் அவர்கள் “KAVALAN SOS” செயலியில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள், நண்பர்கள் எண்ணிற்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்

KAVALAN Dial 100 100

“KAVALAN Dial 100 100” அழைப்பு செயலியை பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அவசர காலத்தில் “100” என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியை தொடுவதின் மூலம், நேரடியாக மாநில காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையை தங்களுடைய இருப்பிட தகவல்களுடன் தொடர்பு கொள்ள இயலும்.

பயன்கள்

  1. அனைத்து Android மற்றும் iPHONE – களில் பயன்படுத்தலாம்.
  2. அவசர உதவிக்கு SOS பட்டனை தொட்டாலே போதும்.
  3. அழைப்பவரின் இருப்பிடம் உடனே GPS மூலம் அறியப்படும்.
  4. அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் SPMCR-ல் உள்ளது.
  5. அழைப்பவரின் கணநேரம் கண்காணிப்பு (Real Time Traking) வசதி உள்ளது.
  6. அழைப்பவரின் இருப்பிட தகவல்கள் மற்றும் வரைபடம் அவர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கு தானாகவே பகிரப்படும்.
  7. காவலன் SOS பட்டனில் தொட்டாலே போதும் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைப்பேசி கேமரா தானாகவே 15 வினாடிகள் ஒலி, ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தில் அனுப்பிவிடும்.
  8. இணைய இணைப்பு இல்லாத (Data available Places) இடங்களிலும் தானியங்கி SMS எச்சரிக்கை Auto SMS Alert) மூலமாக செயல்படும்.
  9. அதிர்வு தூண்டல் (Shake Trigger) வசதியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
  10. ஆங்கிலம் மற்றும் தமிழ் என இருமொழிகளின் வசதி உள்ளது.

இக் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து (AndroidiOS ) தாங்களும் பயன்பெற்று அனைத்து பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு இத்தகவலை பரப்பி உதவி செய்யலாம்.

பயன்படுத்துவது எப்படி?

1. Google Play Store-ல் தேடுதல் பட்டையில் (Search Bar) “Kavalan SOS” என்று டைப் செய்ய வேண்டும்.
2. Kavalan SOS என்ற செயலியை Install என்றபட்டனை அழுத்த வேண்டும்.
3. தற்போது 7 அனுமதி கோரிக்கை ஒன்றன் பின்ஒன்றாக கேட்கப்படும். அவை அனைத்திற்கும் Allow என்று அனுமதி கொடுக்க வேண்டும்.
4. தற்போது தாங்கள் வைத்திருக்கும் ஆன்டிராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டது.

செயலியை செயல்படுத்தும் வழிமுறைகள்; (Installation):

I) Registration Module:

1. இந்த பகுதியில் தங்களது மொபைல் எண்¸ பெயர்¸ மற்றொரு மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
2. இந்த நிலையில் தங்களது கைப்பேசியல் GPS வசதியை ON செய்ய அனுமதி கேட்கப்படும். GPS ON-ல் இருந்தால் மட்டுமே செயலி துள்ளியமாகசெயல்பட முடியும்.
3. இந்த செயல்முறை முடிந்த பின்பு Next கொடுக்க வேண்டும்.

II) Profile Module:

1. Kavalan Welcomes (தங்களது மொபைல் எண்) என்ற பக்கம் திரையில் தோன்றும்.
2. தங்களது புகைப்படம் தேவையென்றால் மொபைல் கேமரா மூலமாகவோ அல்லது கேலரி
மூலமாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்.
3. Email-ID என்ற பகுதியில் தங்களது இ-மெயிலை கொடுக்க வேண்டும்.
4. Date of Birth என்ற பகுதியில் தங்களது பிறந்த தேதியை கொடுக்க வேண்டும்.
5. Male/Female என்ற பகுதியில் உரியதை தேர்வு செய்ய வேண்டும்.
6. Full Address என்ற பகுதியில் தங்களது முழு முகவரியை கொடுக்க வேண்டும் அல்லது அந்த பட்டையில் (Bar) வலது பக்கத்தில் தோன்றும்
Location படத்தை கிளிக் செய்ய Google Map உதவியுடன் தங்களது முகவரியை தேர்வு செய்யலாம்.
7. City என்ற பகுதியில் தங்களது நகரத்தினை பதிவு செய்ய வேண்டும்.
8. Work Address என்ற பகுதியில் தங்களது பணிபுரியும் அலுவலக முகவரியை தேவையென்றால் பதிவு செய்ய வேண்டும்.
9. இவை அனைத்தும் முடிந்த பின்பு Sign UP கொடுக்க வேண்டும்.

III) Activation Module:

1. இந்த பகுதியில் தோன்றும் பட்டையில் தங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ள 6 இலக்க (Activation Code) ரகசிய எண்னை உள்ளீடு செய்த வேண்டும்.பின்பு Next கொடுக்க வேண்டும்.

IV) Emergency Contact Module

1. இந்த பகுதியில் குறைந்தபட்சம் 2¸ அதிகபட்சம் 3 நம்பகமான நபர்களின் மொபைல் எண்களை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
2. இதில் மொபைல் எண்¸ பெயர்¸ உறவுமுறை ஆகியனவற்றை கொடுக்க வேண்டும்.
3. Next பட்டனை அழுத்த வேண்டும்.

தற்போது செயலியானது முழுமையாக பதிவிறக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது தங்களது மொபைல் திரையில் “Kavalan SOS” செயலியின் முகப்பு திரையானது தோன்றும். அதில் உள்ள SOS என்ற பட்டனை 5 விநாடிகள் அழுத்தி பிடிக்க தங்களது அபாய அழைப்பானது சென்னையில் உள்ள “Master Police Control Room” சென்று தங்கள் அருகாமையில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது காவல் அதிகாரிக்கோ அழைப்பு அனுப்பப்படுகிறது. அதன்மூலம் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

1,121 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுள்ளான் ரமேஷ் (22) இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami