2011 பேட்ஜ் காவலர்கள் சார்பாக நிதி உதவி

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.அழகுமலை (இரண்டாம் நிலைக் காவலர்) அவர்கள் கடந்த 17.12.2020-ம் தேதி பணியிலிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார். காவலரின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 2011 பேட்ஜ் காவலர்கள் ஒன்றிணைந்து காக்கி உதவும் கரங்கள் சார்பாக ரூ.15,56,546/- நிதி திரட்டினர். இந்நிதியை இன்று 05.02.2021-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் அழகுமலை குடும்பத்தினரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட உதவி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.


இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்


P.நம்பு குமார்
இராமேஸ்வரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆதரவற்றவரை நல்லடக்கம் செய்த சிவகங்கை காவலர்கள்

753 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிழற்குடையில் கடந்த 31.01.2021 அன்று பெயர், […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452