1 வருடம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

Admin

சென்னை: சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த ஜெனிபர், வ/32, என்பவர் 05.01.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லேப்டாப் திருடு போயிருந்தது தொடர்பாக, F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து, F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்விசாரணை செய்து, மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான கலாம் (எ) அப்துல் கலாம், வ/21, துரைப்பாக்கம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப் கைப்பற்றப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இவ்வழக்கு தொடர்பாக , சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ,வழக்கு விசாரணை முடிந்து 17.03.2021 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி குற்றவாளிமீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி கலாம் (எ) அப்துல் கலாமுக்கு 1 வருட சிறை தண்டணை விதித்து, கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த F-5 சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இன்றைய சென்னை கிரைம்ஸ் 20/03/2021

550 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆறு (எ) அரவிந்த் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452