விருதுநகர் ASP குத்தாலிங்கம் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

Admin

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், காவல்துறையினர் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.குத்தாலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


திருத்தங்கல் காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா அவர்கள், SR அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மற்றும் பெண்குழந்தை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.


விருதுநகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு.மரியஅருள் அவர்கள், இணையதள வாயிலாக அருப்புக்கோட்டை SBK கல்லூரி NSS மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, சாலை பாதுகாப்பு குறித்த மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொள்ளாச்சி அருகே புலித்தோல் ! விற்க முயன்ற 6 பேர் கைது

353 கோவை: பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமி கோவில் அருகே அசோக் நகர் பகுதியில் புலித்தோலை சிலர் விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452