விருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்

Admin

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே  தென்காசி – இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் ஞானகுரு, தலைமை காவலர் பிரகாஷ் காவலர்கள் கண்ணன், ஜெயஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனை செய்தபோது புளியங்குடி பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட இளைஞரணி தலைவர் வெள்ளைத்துரை , மற்றும் அவரது தங்கை பொன்துரைச்சி ஆகியார் வந்த காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் இராஜபாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையிட துணை வட்டாட்சியர் கலைச்செல்வியிடம் ஒப்படைத்தார்.


அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது.

அருப்புக்கோட்டை காரியாபட்டி அருகே கல்லூரணியில் வாகன சோதனையில் 2லட்சம் சிக்கியது . திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு வருவாய் மற்றும் காவல்துறை சார்பாக. காரியாபட்டி, நரிக்குடி திருச்சுழி பகுதியில் வாகனங்களை சோதனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் பறக்கும் படை தாசில்தார் பால்ராஜ் தலைமையில் .கல்லூரணியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த. ரு 2 லட்சம. பறிமுதல் செய்து திருச் சுழி தாசில்தாரி சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு

400 சென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452