வாலிபரை சாதுரியமாக காப்பாற்றிய தீயணைப்பு அதிகாரி 

Admin

மதுரை: மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஏ.டி .பி டவர் ஆறு மாடி அடுக்கு கொண்ட வணிக வளாகம் ஒன்று செயல்பட்டுவருகிறது இதில் நான்காவது தளத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார் மதுரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த மனோஜ் குமார் வயது 32 . இவருக்கு இலக்கு நிர்ணயித்து , இதில் அவர் இலக்கை எட்ட முடியவில்லையாம். எனவே, அவரிடம் மேலதிகாரி கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் இவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் .

இந்த நிலையில், ஆறாவது தளமான மொட்டை மாடிக்கு சென்று மேலே நின்று தற்கொலை செய்துகொள்ள போவதாக கத்தியுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ஆறாவது தளத்திற்கு சென்றனர் . தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் மட்டும் மனோஜ்குமார் உடன் பேச்சு கொடுத்துக்கொண்டே அருகே சென்றார் இதில் மனம் மாறிய மனோஜ்குமார் கீழே இறங்கினார்.

பின் , நிலை ய அலுவலர் அவரிடம் சில அறிவுரைகளைக் கூறினார். பின்னர் அவரை, எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தீயணைப்பு நிலைய அலுவலர் சாதுரியமான பேச்சால் தற்கொலை முயற்சியை கைவிட்டு கீழே இறக்கிய நிலைய அலுவலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

சுமார் அரை மணி நேரம் வேடிக்கை பார்க்கும் மக்களால், பைபாஸ் சாலையில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு

436 மதுரை: மதுரை ரயில் நிலையத்தின் வளாகத்தில் அதிகப்படியான பழைய இரும்பு பிளாஸ்டிக் மற்றும் காலியான எண்ணெய் டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்த இடத்தில் இன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452