வாடிப்பட்டியில் துணை இராணுவம்- போலீஸ் கொடி அணிவகுப்பு

Admin

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ந்தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை,நிலைகண்காணிப்புக்குழு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள துப்பாக்கி ஏந்தியதுணைபடையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதத்தில் அச்சமின்றி வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தியும்,மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் போலீசாருடன் இணைந்து துணைஇராணுவபடையினரின் கொடி
அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பிற்கு கூடுதல்மாவட்டபோலீஸ்சூப்பிரண்டு வனிதா தலைமை தாங்கி தொடக்கிவைத்தார்.

சமயநல்லுhர் போலீஸ்துணைசூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கிராஜ், (பயிற்சி)டி.எஸ்.பி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ்இன்ஸ்பெக்டர் ஸ்ல்வியா ஜாஸ்மின் வரவேற்றார். இந்த அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதபடை போலீசார்கள், துணை ராணுவவீரர்கள் கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பு ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் தொடங்கி குலசேகரன்கோட்டைபிரிவு, போடிநாயக்கன்பட்டிபிரிவு, இராமநாயக்கன்பட்டி, பொட்டுலுப்பட்டி, சந்தைபாலம், லாலாபஜார், பஸ்நிலையம், ஜெமினிபூங்கா, பழைபத்திரபதிவு அலுவலகம்,
பழைநீதிமன்றம், ஆர்.டி.ஓ.ஆபிஸ், யூனியன்ஆபிஸ்பிரிவு வழியாக போலீஸ்நிலையம்
வந்தடைந்தது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம்

303 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452