வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அழைப்பு

Admin

கோவை : வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய உட்கோட்டப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நல்ல உடல்நிலையில் உள்ள ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், சிறப்புக் காவலர்களாக பணியாற்றிட அழைக்கப்படுகின்றனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல்பிரிவினை தொடர்புகொண்டு ஒப்புகை அளிக்கவும். மேலும் வாக்காளர் அடையாள அட்டையின் 2 நகல்களை சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் பிரிவில் நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை மாநகர காவல் ஆணையர் ஆய்வு

230 கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித் சரண் IPS அவர்கள் சிங்காநல்லுர் தொகுதி PERKS பள்ளி வளாகத்தில் வைக்க பட்டுள்ளது EVM […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452