லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…?

Admin 2

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது.

லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும்,DVAC என்றழைக்கப்படும் “Directorate of Vigilance and Anti-Corruption” என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல் பாடுகளையே கண்காணித்து, தவறு இறுப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

லஞ்ச ஒழிப்புச்சட்டம்

லஞ்ச ஒழிப்புச்சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 பிரகாரம், அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- “PUBLIC SERVANTS” என்ற வரையரறைக்குட்பட்டதால், கடைநிலையில் உள்ள ஒரு வி.எ.ஓ.-வை எப்படி நூறுக்கும், இருநூறுக்கும், அந்தச்சட்டத்தின் கீழ், எளிதில் பொறி வைத்துப் பிடிக்கிறார்களோ, அதேபோல் பொறிவைப்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள்தான்.

சமீபத்தில், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில், பஞ்சாயத்துபோர்டு தலைவர்களைக்கூட லஞ்சஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்துள்ளார்கள்.

லஞ்சத்தில் நான்கு வகைகள் 

அவை பின்வருமாறு:

(a) Demanding bribe from any individual, either to do any official act, or to do any service or disservice to any one

(b) Mega Level-Organised Corruption, by colluding with each other, viz. the whole team of officials right from bottom to top, the contractors and the middle men, would be colluded with each other. In this type of corruption, the Public/Govt money alone will be siphoned

(c) Minor Level-Organised Corruption, wherein the enforcing officials in the field and the organised criminals in the same area, would collude with each other for sharing the ill-gotten money.

(Example- The Corrupt Officials would collude with the Prohibition Offenders, Gamblers, Brothel-house-runners, Smugglers and other anti social elements in their jurisdictions for ill-gotten money)

(d) Petty corruption ( Mostly practiced by Corruptive Traffic Police men with the road side vendors and the Last grade servants, almost in all the Government offices, wherein only a meager amount of Rupees, viz. Rs- 100/ to 500/ are involved)

இந்த நான்கு வகையில்,

1-வது வகையான லஞ்சத்தில் ஈடுபடுபவர்கள்தான் அடிக்கடி “பொறி வைப்பு” நடவடிக்கையில் சிக்குவார்கள்.ஏனெனில், இதில் பாதிக்கப்பட்ட நபர் Motivate-ஆகி புகார் அளிக்க தயாராக இருப்பார்.

2-வது வகையான லஞ்சம் வொயிட்காலர் (white color) லஞ்சம் எனப்படும். இந்த வகை லஞ்சத்தில் இழப்புக்குண்டாவது அரசாங்கம்தான். இழப்புக்குண்டாகும் அரசுப்பணத்தின் அளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கும். எப்போதாவது சில நேரங்களில் அத்திபூத்தார் போல சிலநேர்மையான அதிகாரிகளின் கண்களில் படும்போது மட்டும் திடீரென வெடித்து பரபரப்பாகும்.இந்த வகையான லஞ்சத்தால் எற்படும் பாதிப்பு கேன்ஸர் போன்றது. ஏனெனில், இதன் பாதிப்பு, கண்களுக்கு உடனடியாகத்தெரியாது,

ஆனால், நாளடவில் ஏற்படும் பாதிப்பு மரணத்திற்கு ஒப்பானது.

3-வது வகையான லஞ்சத்தில்தான், சமூகம் சீரழிவது கண்ணுக்கு எதிரேயே தெரியும். கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல்-ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல.

4-வது வகை லஞ்சம் பொதுமக்களுக்கு அன்றாடத் தொல்லைகள் தரும் வகையைச் சேர்ந்தது.100ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் லஞ்சத்தில் ஈடுபடும் ஒரு கடை நிலை ஊழியரை தண்டிப்பது பரிதாபத்துக்கு உரியதாகத்தெரிந்தாலும், பொது இடங்களில் அச்செயல் மிகுந்த தொல்லைக்குரியதாகவே தெரியும்.4-வது வகையில் சொல்லப்பட்டுள்ள Petty-Corruption என்பது பிச்சைக்காரர்கள் அதிகார தொனியில், பிச்சை எடுப்பது போலத்தான்.

அதே போல, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையிலும்,மூன்று வகைகள் உண்டு.

1) Trap Case. ( பொறி வைத்துப்பிடித்தல் )

2) Regular case. (FIR will be registered later based on the outcome of (a)Detailed enquiry (b) Preliminary enquiry(c) Surprise Check (d) even sometimes from Vigilance reports.

3)Regular case for D.P Assets ( FIR will be registered by DVAC for the possession of Disproportionate Assets by the public servants.FIR will be registered ,only after the Vigilance Commision and the DVAC satisfied from the preliminary enquiry or Detailed enquiry that there is a case of prima facie of D.P.Assets against the corruptive public servants. )

எப்படி புகார் அளிப்பது:

இதில், லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல் படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல் படுவார்கள். பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால், ‘நம் அரசு வேலையை முடித்துக் கொடுக்க மாட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். பொறிவைப்பு நடவடிக்கை முடிந்ததும், அந்த வேலையை செய்து கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு,ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.

2, மற்றும் 3-வது வகையான லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்கு, பெரும்பாலும் பொறிவைப்பு நடவடிக்கைகான புகார்கள் வராது. காரணம், இது ஒரு Collusive Corruption. இவற்றை Whistle-Blower கள்தான் வெளிக்கொண்டுவரவேண்டும்.

இந்த வகையான Collusive Natured Corruption- தொடர்பான குற்றங்களுக்குஎதிராக, FIR போடுவதற்கு அடிப்படையாகத்தேவைப்படுகின்ற Detailled Enquiry/ Preliminary Enquiry/ Surprise Check செய்வதற்கு தேவையான தகவல்கள், லஞ்சப்பணம் transaction நடைபேறும் இடம், Illegal Assets பற்றிய செய்திகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தரமற்றஅரசுப்பணிகள் (Sub-standard Works) பற்றிய தகவல்கள், மாமூல் நடைபெறும் விதம், அவை நடைபெறும் இடம் மற்றும் அதில் Colludeஆகியுள்ள Corrupt Officials மற்றும் வாங்கிக் கொடுக்கும் Middle men மற்றும் சமூகவிரோதக்குற்றங்கள் செய்யும் Organised Offenders பற்றிய விபரங்களை, அனுப்புபவர் பெயர் முகவரி எதுவும் குறிப்பிடாமல், புகாராகவோ அல்லது இமெயில் மூலமகவோ,சென்னையில் இதனடியில் கூறிஉள்ள அதிகாரிகளுக்கு அனுப்பினால் நிச்சயம் அது உரிய நடவடிக்கைகு வரும்.

ஆனால், இந்த வகையான வழக்குகளில், வழக்கின் தன்மையைப்பொறுத்துத்தான், கைது போன்ற நடவடிக்கைகள் செய்வார்கள். இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப்பேர்வழி காலப்போக்கில் சட்னியாகிவிடுவார்.

விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC- முகவரிகள் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

1) Vigilance Commissioner
Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566
Email: parsec@tn.gov.in

(2)The Director,
Vigilance and Anti-Corruption,
293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.
Chennai – 600 028.
Phone-044-22321090/22321085/22310989/
22342142
E-mail: dvac@nic.in

மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்புகார்களை அளிக்கும்பட்சத்தில், மாநில அரசுகட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள். அப்புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களேஉங்கள் இடத்திற்கு, உங்களைத்தேடி வந்து புகாரைப்பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

CHENNAI ZONE

Joint Director and Head of Zone,
III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.
044-28232756 (Direct),
044-28272358(General),
044-28232755 (FAX) hozchn[at]cbi[dot]gov[dot]in 09444446240
State of Tamil Nadu, Kerala & Pondicherry.

2 thoughts on “லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…?

  1. ஐயா வணக்கம் நான் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி தாலுக்காவில் உல்லேன் எனக்கு அவிநாசி யில் இடம் உல்லது பட்டா உட்பிரிவுக்காக எழுதிவைத்தேன் போன வருடம் எழுதி வைத்தேன் மொத்த பத்திரத்தையும் வாங்கி வைத்து உங்களை அழைக்கும் போது வாங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டு விட்டார் பிறகு போனமாதம் வந்து இடத்தை அளந்து சென்று விட்டார் பிறகு 10000ரூபாய் தரும் படி கேட்டார் இல்லை என்று கூறியதர்க்கு நீங்கள் பிறகு புதிதாக மறுபடியும் அப்லை செய்யுங்கள் என்கிறார் கள் நாங்கள் என்ன செய்வது நீங்களே எங்களை காக்க வேண்டும் வாங்கவும் கஷ்டப்பட்டு தான் உழைக்கிறோம் ஐயா

  2. அமித்ஷாவிடம் நான்பேசனும் காப்பார் கடவுள்?

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையை நவீனப்படுத்த ரூ.25 ஆயிரம் கோடி, மத்திய அரசு ஒதுக்கீடு

9,790 டெல்லி: டெல்லியில் இன்று நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சர்கள் கூட்டம் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பை […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452