ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு, சென்னை காவல்துறையினர் நடவடிக்கை

Admin

ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த அப்துல்காதர் மற்றும் 3 நபர்கள் T – 4 மதுரவாயல் , M-1 மாதவரம் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பேரில், காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி “குண்டர் காவல்“ தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன், தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1.மணி (எ) எட்டு மணி, வ/26, திருவேற்காடு 2.அந்தோணி ராஜ் (எ) கரி, வ/27, மாங்காடு ஆகிய இருவர் மீது T-4 மதுரவாயல் காவல் நிலையத்திலும் 3.அப்துல்காதர், வ/41, அண்ணா நகர் என்பவர் மீது மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் 4.அருள், வ/27, மாதவரம் என்பவர் மீது M-1 மாதவரம் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய 30.03.2021 அன்று உத்தரவிட்டதின்பேரில், மேற்படி 3 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிறுவன் இயக்கிய வாகனம் விபத்தில் சிக்கியது: தாயாருக்கு தண்டனை

598 கோவை : சிறுவன் இயக்கிய வாகனம் விபத்தில் சிக்கியதையடுத்து, விதிகளை மீறி சிறுவனிடம் வாகனத்தைக் கொடுத்த அவரது தாயாரை ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் இருக்குமாறு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452