முன்னாள் துணை வட்டாச்சியர் வீட்டில் நகை, நாட்டு துப்பாக்கி கொள்ளை ?

Admin

மதுரை : மதுரை வானமாமலை நகர் ஷாலினி தெரு பகுதியில்குடும்பத்துடன் வசித்து வருபவர் முன்னாள்  துணை வட்டாச்சியரான ரவீந்திரன் இவர் குடும்பத்துடன்கடந்த 15ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு ராஜபாளையம் சென்று இன்று அதிகாலை வீடு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 65 பவுன் தங்க நகை 25 கிலோ, வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நாட்டு துப்பாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.

உடனடியாக சம்பந்தப்பட்ட எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் பழனி குமார் ,ஆய்வாளர் சக்கரவர்த்தி கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும்  அச்சத்தையும் பரபரப்பு நிலவி வருகிறது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வரபட்ட சிறுமி, ஒப்படைத்த வடக்கு காவல்துறையினர்

487 திருப்பூர் : மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிறுமி மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452