மத்தாப்பூ தொழிற்சாலை தீ விபத்தில் காயமடைந்த ஒருவர் பலி..

Admin

விருதுநகர் : விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில், சிவகாசியைச் சேர்ந்த விசாகன் என்பவருக்கு சொந்தமான மத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு தீபாவளிக்கு சிறுவர்கள் கொளுத்தி மகிழும் கலர் மத்தாப்பூ ரகங்கள் பல வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மத்தாப்பூ குச்சிகளில் மருந்து கலவை பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மத்தாப்பூ குச்சிகள் எதிர்பாராமல் உரசி தீ விபத்து ஏற்பட்டதில் 1 பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்றிரவு சிகிச்சை பலனலிக்காமல் புதுராஜா (54) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திண்டுக்கலில் குற்றங்களை குறைக்க புதிய யுக்தி

581 திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி இருசக்கர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452