மதுரை DC சுகுமாரன் தலைமையில் சாலை பாதுகாப்பு நோட்டீஸ்

Admin

மதுரை : மதுரை மாநகர காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டது.
இதில் , மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு.சுகுமாரன் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் கார்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் 32- வது சாலை பாதுகாப்பு மாதம் விழா கொண்டாடப்பட்டது இதில் சாலைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக விளம்பர பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. கார்களில் ஒளி விளக்குகள் அதிக வெளிச்சத்தை தவிர்க ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

உதவி ஆணையர் திரு.திருமலை குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், ஆய்வாளர்கள் தங்கமணி, ரமேஷ்குமார், ராஜேஸ், பால் தாய் மற்றும் போக்குவரத்து காவலர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வாகன ஒட்டிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

மாநகர போக்குவரத்து இணை ஆணையர் சுகுமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் விபத்து ஏற்படும் இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மற்றும் கார் ஒளி விளக்குகளில் ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விபத்துகள் குறைந்துள்ளன. காலம் மற்றும் போக்குவரத்து குறைவாக உள்ளதால் விபத்து குறைவாக உள்ளது. மேலும் பொது மக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த மாதிரி முகாம் அமைத்து வருவதாக கூறினார்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொள்ளை கும்பலை 15 மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறையினர்

715 கன்னியாகுமரி :   திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத். நகைக்கடை உரிமையாளரான இவரின் காரில் தொழில் சம்மந்தமாக கொண்டு சென்ற 76,40,000/- ரூபாயை நான்கு மர்ம நபர்கள் போலீசார் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452