மதுரை ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு

Admin

மதுரை: மதுரை ரயில் நிலையத்தின் வளாகத்தில் அதிகப்படியான பழைய இரும்பு பிளாஸ்டிக் மற்றும் காலியான எண்ணெய் டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனால் வெளிப்பட்ட கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவதொடங்கியது. தொடர்ந்து தீயானது மளமளவென அடுத்தடுத்து இடங்களில் பரவதொடங்கியதை அடுத்து மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயினை அணைத்தனர்.

இதனால், அருகாமையில் உள்ள கடைகளில் தீ பரவாதவாரு தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் திலகர் திடல் போலீசாரும் தீ விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதோடு குப்பைகள் மற்றும் பயன்படுத்தபடாத பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஸ்பிரே அடித்து கொள்ளை சம்பவம், சூலூர் காவல்துறையினர் விசாரணை

427 கோவை: கோவை, சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகைகளை கொள்ளையடித்தனர். கருமத்தம்பட்டி சுண்டை மேடு பகுதியை சேர்ந்தவர் மாறன்(45) இவரது […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452