மதுரை மாநகர காவல்துறையில் பதியப்பட்ட குற்ற வழங்குகள்

Admin

மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் நிறுவன கணக்காளரின் வீட்டை உடைத்து 32 பவுன் நகை பணம் கொள்ளை

மதுரை மாட்டுத்தாவனி அருகேதனியார் நிறுவன கணக்காளர் வீட்டை உடைத்து 32 பவுன் நகை ரூபாய் 20,000 த்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே கே கே நகர் பகுதியில் லேக்ஏரியாவில்குடி இருந்து வருபவர் லட்சுமண நாராயணன் மனைவி லாவண்யா 30 .இவர் சிவகங்கையில் ஓட்டல் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் ஊட்டி சுற்றுலாவுக்கு சென்றிருந்தார்.பின்னர்அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது .வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 32 பவுன் தங்க நகை மற்றும் பணம் 20 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக லாவண்யா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்சில் வைத்து இருந்த லேப்டாப் பணம் திருட்டு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்சில் வைத்து இருந்த லேப்டாப் மற்றும் பணம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜதுரை 30.இவர் இதே முகவரியில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருடைய மருமகனை திருவண்ணாமலையில் கல்லூரியில்சேர்த்துவிட்டு மதுரை திரும்பினார் .இங்கிருந்து சிவகங்கை செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பஸ்ஏறினார்.அங்குதான்வைத்திருந்த பேக்கை அருகில் வைத்தருந்தார். சற்று நேரம் சென்று பார்த்தபோது அந்த பேக் காணவில்வைதிருடுபோயிருந்து. அதில் லேப்டாப் ஒன்று ,ஹார்ட் டிஸ்க் ,மெமரி கார்டு பணம் ரூபாய் 17,000 ம்வைத்திருந்தார்.இதுதொடர் ராஜதுரை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.


மதுரை அருகே வாலிபரை தாக்கிய 5 பவுன் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை

மதுரை அருகே வாலிபர்களை தாக்கி 5 பவுன் நகையை பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கருப்பாயூரணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ் பாண்டியன் 20. இவரும் இவரது உறவினர் கலையரசனும் பேங்கிற்குசென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர் .அவர்கள் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் அம்மன் கோவில் அருகே கிருதுமால் நதியின் அருகே தங்கள் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு புகைபிடித்துக்கொண்டிருந்தனர்..அப்போது அங்கு பைக்கில்வந்த 2 மர்ம ஆசாமிகள் அவர்களை தாக்கிவிட்டு அவர்கள் அணிந்திருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் பாண்டியன் சிலைமான் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டவர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு

309 கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபரை காரில் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது. இதில் பாதிக்கப்பட்டவர் உடல் காயங்களுடன் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452