மதுரை மாநகர் “பகுதி ரோந்து காவல் அதிகாரிகள் என்னும் புதிய திட்டம்

Admin
மதுரை :மதுரை மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் பாதுகாக்கவும், பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாவும், தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், பொதுமக்களை காவல்துறையோடு ஒன்று சேர்க்கும் உயரிய நோக்கத்தில் மதுரை மாநகர காவல்துறையினரால் “பகுதி ரோந்து காவல் அதிகாரிகள்” (Sector Police Officers) என்னும் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை மதுரை காவல்துறை ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா,IPS ஜனவரி 26-ஆம் நாள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இத்திட்டத்திற்காக மதுரை மாநகர் முழுவதுமாக ஒளிரும் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்ட(Blinkering Lights) 15 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 27 இரு சக்கர ரோந்து வாகனங்களும் ரோந்து பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களாகிய உங்களை பாதுகாப்பதே எங்களின் முக்கிய கடமையாகும்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.N.ரவி சந்திரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

நிறைவு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட SP வாழ்த்து

532 தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கவாத்து மைதானத்தில் 40 ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி முடிவடைந்து (Passing out parade) இன்று (29.01.2021) நடைபெற்ற நிறைவு விழா […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452