மதுரை மாநகர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

Admin

மதுரை: மதுரையில் சாலை விபத்துகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருவதால் அதிகளவில் உயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. இதில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணியாமல் மேற்கொள்ளும் பயணத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் மதுரை மாநகர் காவல்துறை சார்பில் இன்று பொதுமக்களுக்கு காண்பித்து விழிப்புணர்வு செய்தனர்.

இந்த குறும்படத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர்கள் செல்போன் பேசியவாறே வாகனத்தை இயக்குவது, தலைகவசம் அணியாமல் செல்வது, அதிகபாரம் ஏற்றி செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்து தத்ரூபமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

மேலும் , மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாரன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து புதிதாக இலவச தலைகவசத்தையும் வழங்கினார்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மனிதநேயமிக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.

425 திண்டுக்கல் : திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தாா். தகவல் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452