மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள வங்கி 3 நாட்கள் விடுமுறை ?

Admin

மதுரை : தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக வேகம் எடுத்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று பரிசோதனை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல்,

கண்டறியப்படும் நபர்கள் வசிக்கும் பகுதிகளை தனிமை படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்கள் உள்ள தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மதுரை தெற்கு மாசி வீதியில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வங்கி இன்று மற்றும் நாளை மூடப்பட்டு வங்கி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுவதோடு, குளோரின் பவுடர்கள் தூவப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக வங்கி மூடப்பட்டது, வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொரோனா குறித்து பெரும் அச்சத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

லாவகமாக பிடித்த தீயணைப்பு காவல்துறையினர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்

514 திண்டுக்கல்: திண்டுக்கல் ஆ.ர்.வி. நகர் பகுதியில் சலவைத் தொழிலாளி வீட்டில் பாம்புகள் கூட்டமாக புகுந்தது. இதனையடுத்து திண்டுக்கல் நகர் தீயணைப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452