மதுரை முக்கிய கிரைம்ஸ் 19/03/2021

Admin

மதுரை தெப்பக்குளத்தில் மாநகராட்சி லாரி மோதி சாலையை கடந்த வாலிபர் பலி

மதுரை : தெப்பக்குளத்தில் மாநகராட்சி லாரி மோதி சாலையை கடந்த வாலிபர் பலியானார். உசிலம்பட்டி அய்யனார் குளத்தை சேர்ந்தவர் தவசி மகன் தங்கமாயன் 23 .இவர் மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் தனியார் கல்லூரி முன்பாக சாலையை கடந்தபோது அந்த வழியாக சென்ற மாநகராட்சி லாரி மோதியது.இதில்தங்கமாயன் சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மாநகராட்சி லாரி டிரைவர் சிலைமானை சேர்ந்த அரியமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோச்சடையில் ஒர்க்ஷாப்பில் பேட்டரிதிருடியவர் கையும் களவுமாக கைது

மதுரை : கோச்சடை பகுதியில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பேட்டரி திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். காளவாசல் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பெருமாள் .இவர் கோச்சடையில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இங்கு பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த பாண்டியராஜன் என்ற வினோத்குமார் 41 என்பவர் அங்கு வைத்திருந்த பேட்டரியை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை எஸ் எஸ் காலனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் அளிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

879 சென்னை : சென்னை பெருநகர காவல், இன்று 18.03.2021 மாலை வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டிபொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்துவதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452