மதுரை முக்கிய கிரைம்ஸ் 15/03/2021

Admin

மதுரை டிவிஎஸ் நகரில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை

மதுரை : மதுரை டிவிஎஸ் நகரில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை டிவிஎஸ் நகர் மீனாட்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் கர்னல்சுபாஷ். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக கர்னல் சுபாஷ் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*********

ஆரப்பாளையத்தில் மண்பானை வியாபாரியை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது

மதுரை ஆரப்பாளையத்தில் மண் பானையை உடைத்து அதன் வியாபாரியை தாக்கி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆரப்பாளையம் அன்னை இந்திரா நகரைசேர்ந்தவர் கோபிநாத். இவர் கண்மாய்க்கரை பகுதியில் மண் பானை மற்றும் விளக்குகள் வியாபாரம் செய்து வருகிறார் .இவரை கத்திமுனையில் மிரட்டி மண் பானைகளை உடைத்து அவர் வைத்திருந்த பணம் ரூபாய் 400 ஐவாலிபர் ஒருவர்பறித்துச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோபிநாத்தின் மனைவி மாரி தேவி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரபாளையம் கண்மாய்க்கரை பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் அஜய்பிரசன்ன குமார் என்ற குட்டி சாக்கு என்ற வாலிபரை கைது செய்தனர்.
*********
அவனியாபுரத்தில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

மதுரை மார்ச் 15 அவனியாபுரத்தில் பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே நல்லூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சை மகன் பழனியாண்டி 29. இவர் சம்பவத்தன்று அவனியாபுரம்வெள்ளக்கல் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சையில் இருந்தபோது காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல்ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துஅண்ணன் வீரணன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*****/*


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இன்றைய சென்னை கிரைம்ஸ் 15/03/2021

314 சென்னை : DAD – போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையாக, கிண்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அண்ணாமலை மற்றும் கோபிநாத் ஆகியோர் J-3 கிண்டி காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452