மதுரையில் பதியப்பட்ட முக்கிய வழக்குகள்

Admin

மதுரை அருகே பரிதாபம் குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் பலி

மதுரை: மதுரை அருகே குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார் . மதுரைருகே சிலைமானஅய்யனார்புரம் உலகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுரந்தரபாண்டி மகன் முத்துப்பாண்டி 28 .இவர் அந்த பகுதியில் உள்ள ரைஸ்மில்லின் அருகே குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி மின் மின்சார வயரை பிடித்து இழுத்தார்.அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக முத்துப்பாண்டி உயிரிழந்தார் .இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய அப்பா சவுந்தரபாண்டியன் கொடுத்த புகாரில் சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********

மதுரை கோவலன்நகரில் வீட்டில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

மதுரை கோவலன்நகரில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
கோவலன் நகர் மெயின் ரோடு அழகர் நகரை சேர்ந்தவர் சாந்தா 74. இவர் வீட்டில் சமையல் செய்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது.இதில் தீயில் கருகிய சாந்தாவை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிர் இழந்தார் .இந்த சம்பவம் குறித்து மகள் சொர்ணலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மனைவி வாங்கிய கடனால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் மனைவி வாங்கிய கடனால்னால் மனமுடைந்த கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் கம்பர் தெரு சேர்ந்தவர் லட்சுமணன் 56. இவருடைய மனைவி பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த கணவர் லட்சுமணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து மகன் கணேஷ் சபாபதி கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********

மதுரை அவனியாபுரத்தில் கத்திமுனையில் மிரட்டி பெட்ரோல் நிரப்பிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

மதுரை மார்ச் பத்து அவனியாபுரத்தில் கத்தி முனையில் மிரட்டி பெட்ரோல் நிரப்பிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர் அவனியாபுரம் வெள்ளை கல்வியில் பெட்ரோல் பங்கு உள்ளது இங்கு பழங்காலத்தைச் சேர்ந்த லட்சுமணன் 19 மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் பெட்ரோல் போட இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர் அவர்கள் நிரப்பிய பெட்ரோலுக்கு காசு கொடுக்காமல் கத்திமுனையில் மிரட்டி போட்டுள்ளனர் இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் கூடிவிட்டனர் அவர்கள் வந்ததும் அவர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*****


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சென்னையில் முக்கிய கிரைம்ஸ்

320 போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452