மதுரையில் நடைபெற்ற விபத்துக்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு

Admin

மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் பலி

மதுரை மார்ச் 5 மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமிற்குசென்ற முதியவர் வழுக்கி விழுந்து பலியானார். மதுரைமுனிச்சாலை காஅபாளையம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் 79. இவர் பாத்ரூமிற்கு சென்றபோது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கோதண்டராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துமகள் தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*****

திருநகரில் கார் மோதி பைக்கில் சென்றவர் பலி

மதுரை மார்ச் 5 திருநகரில் கார் மோதி பைக்கில் சென்றவர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம்ஆர்.வி. பட்டியை சேர்ந்தவர் குமரேசன் 48. இவர் திருநகர் ஜிஎஸ்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது திருநகர் சீனிவாசன் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் 42என்பவர் ஓட்டி சென்ற கார்பைக்கின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டகுமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்தவிபத்துகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
******

மதுரை புது நத்தம் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் போலீஸ் ஏட்டு படுகாயம்

மதுரை.மார்ச்.5 மதுரை புதுநத்தம் நத்தம் ரோட்டில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை நாராயண புரத்தை சேர்ந்தவர் தவமணிமகன்தவபிரபு 38 .இவர்செல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரும்இவருடைய தந்தையும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது திருப்பாலை புது நத்தம் ரோட்டில் நத்தம் அண்ணாநகரை சேர்ந்த தியாகபிரியன் மகன் பிரசாந்த் 27 என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் தவறி விழுந்த தலமைக்காவலர் தவபிரபுபடுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தவிபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
**********


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இன்றைய சென்னை கிரைம்ஸ் 05/03/2021

360 மனைவி கொலை, மரண தண்டனை தீர்ப்பு  சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், 16.02.2012ல் அவரது மனைவி மோனாம்பாளை கொலை செய்த வழக்கில், கண்ணனுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452