மக்கள் தைரியமாக வாக்கு அளிக்கலாம், சென்னை போலீஸ் கமிஷனர் தகவல்

Admin

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள்  நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்குகள் எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.G.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்களுடன் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

வேட்பாளர்களுடன் உடன் இருக்கும் நபர்கள் பூத் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை
பூத்துகளில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது.

வேட்பாளர்கள் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம்.

04423452437, 9498181239 இந்த நம்பர்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம்

தேர்தல் சம்மந்தமான புகார் ஏதேனும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்.

வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிக்க அனுமதி இல்லை.

இதை தவிர வேறு யாரும் வாகனம் தேர்தல் அன்று பயன்படுத்த கூடாது.

18 சின்ன சின்ன சண்டைகள் மீது புகார் எடுக்கப்பட்டு உள்ளது.

வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டருக்குள் கட்சி தேர்தல் அலுவலகங்கள் அனுமதி இல்லை.

இப்பவரை சென்னைக்கு செட்டில் 44.41கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம்.

லொயோலா கல்லூரி,ராணி மேரிஸ் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும்.

3000 மேல் கேமராக்கள் வாக்குசேகரிக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன இதில் பங்குகளை விற்பது இல்லை இங்கே நகை வாங்கிக்கொண்டு கொடுப்பதோ செய்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிகழ்வில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் (தெற்கு) டாக்டர்.N.கண்ணன், இ.கா.ப, திரு.செந்தில்குமார், இ.கா.ப, (வடக்கு) இணை ஆணையாளர்கள் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப, (கிழக்கு), திருமதி. S.லட்சுமி, இ.கா.ப (தெற்கு) திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.P.பகலவன், இ.கா.ப, மற்றும் சரக காவல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவையில் மாணவிக்கு அடி உதை 3 பேர் மீது வழக்கு பதிவு

415 கோவை : கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சுல்தானா பர்வீன் ( வயது 20 ) இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452