போலீசார் பாதுகாப்புடன் சக்குடி முப்புலி சாமி திருக்கோயில் ஜல்லிக்கட்டு

Admin

மதுரை : மதுரை மாவட்டம் சக்குடி முப்புலி சாமி திருக்கோயில் ஆண்டு தோறும் நடக்கும் மாசி உற்சவ விழாவின் போது ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். கோயில் திருவிழாவை முடிந்து நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் தலைமையில், கூடுதல் எஸ்பி வனிதா. மேலூர் ஆர்டிஓ ரமேஷ், ஊராட்சித் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை . கம்பம், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. பிற்பகல் வரை 385 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை, பார்வையிட்டார். டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜ்திலகன், உதவி இயக்குனர்கள் டாக்டர் சரவணன், எம் எஸ் சரவணன், ரவிச்சந்திரன், ஞான சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 70 டாக்டர்கள் மாறுதலுக்கு பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் பதியப்பட்ட முக்கிய வழக்குகள்

666 மதுரை அருகே பரிதாபம் குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் பலி மதுரை: மதுரை அருகே குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452