பொய்யான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை

Admin

சேலம் மாநகரத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 400 நபர்கள் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் சுமார் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளை கடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ,சமூக வலைதளங்கள் மற்றம் குறுஞ்செய்தி மூலமாக தவறான செய்தி வேகமாக பரவிவருகிறது. இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும், இதனை பொதுமக்கள் யாரும் நம்பி பீதியடையவேண்டாம் எனவும், சேலம் மாநகர காவல்துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.
இதே செய்தியானது வீடியோ மற்றும் இதே ஆடியோவுடன் இணைத்து கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் இதேபோல் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து கடந்த 18.15.2018 மற்றும் 25.08.2019 ஆகிய தேதிகளில் சேலம் மாநகர காவல்துறை சார்பாக மறுப்பு மற்றும் விழிப்புணர்வு செய்திகள் வெளியிடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு அதே வாதந்தியை புதிது போல பரப்பி வருகின்றனர் இது போன்ற பொய்யான வாதந்திகளை சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது சட்ட விரோதமான செயல் ஆகும். வேறு மாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் எப்போதோ நடைபெற்ற சம்பவங்களை சேலத்தில் நடைபெற்றது போல் சித்தரித்து காட்டுகின்றனர். மேலும் எங்கேயோ நடைபெற்ற சம்பவத்தை சேலத்தில் நடைபெற்றது போன்ற வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற பொய்யான தகவல்கள் மற்றும் வாதந்திகளை பொதுமக்களிடையே பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இச்செய்தியை தற்போது வெளியிட்டவாகள் குறித்து சேலம் மாநகர கணிணிசார் குற்றபிரிவு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இது போன்ற பொய்யான வதந்திகளை பரப்புவோர் பற்றியோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து தகவல்கள் ஏதேனும் தங்களது கவனத்திற்கு தெரியவரும்பட்சத்தில் பொதுமக்கள் உடனே காவல்துறையினரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகிறது.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கும்பகோணத்தில் கடத்தல் கும்பல் சில மணி நேரத்தில் கைது

496 தஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜீவ் நகரில் வசித்து வரும் லாரி ஓனரான பஷீர் அகமது என்பவரை கடந்த 13-4-2021 அன்று இரவு ஒரு மர்ம கும்பல் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452