புது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு

Admin

சேலம் : சேலம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இருவரும் வீராணத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்தனர் இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அருகில் இருந்த உறவினர்கள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது மோனிஷா கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக இருந்தநிலையில் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து வீராணம் காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டது இதன் அடிப்படையில் விரைந்து வந்த வீராணம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 40 நாட்கள் ஆன நிலையில் இந்த சம்பவம் நடப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமான 40 நாட்களில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி

459 திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணும் மையத்தை முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டசபை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452