புதுப்பொலிவுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை S S காலனி காவல் நிலையம்

Admin

தமிழகத்தின் பெரும்பாலான காவல் நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையங்களைபுதிய கட்டடங்களில்இயக்குவதற்கு தமிழக அரசு கட்டப்பட்டு வருகிறது.

இந்த வகையில் மதுரை மாநகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீரத்துரை மற்றும் எஸ் எஸ் காலனி காவல் நிலையங்கள் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தன.இரண்டு காவல் நிலையங்களும் புதிய கட்டிடத்தில் இயக்குவதற்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் ரூபாய் 158 லட்சங்கள் மதிப்பீட்டில் புதிய பொலிவுடன் எஸ் எஸ் காலனி காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு வந்தது.

அதனை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிளவர் சீலா தலைமையில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் திரு.சிவபிரசாத், துணை குற்றப் பிரிவு துணை ஆணையாளர் திரு.பாஸ்கரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அவசர உதவிக்காக புதிய புறக்காவல் நிலையம்

619 திருவாரூர் : திருவாரூர் கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பன் கடைத்தெருவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில்… மாவட்ட […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452