சென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 4ஆம் தேதி முதல் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் லலிதா ஜுவல்லரியின் 27 கடைகளில் ரூ 1000 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ 1. ‘2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.