நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

Admin
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அருவன்குளத்தை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் கடந்த 01-02-2021-ம் தேதியன்று, சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட தனது Splendor இரு சக்கர வாகனம் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சந்திப்பு குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.பழனிமுருகன் அவர்கள் மற்றும் போலீசார், குற்றவாளியை தேடி வந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் இரு சக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10,000/- மதிப்புள்ள Splendor இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தார்கள்.
தென்காசியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்
 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

2011 பேட்ஜ் காவலர்கள் சார்பாக நிதி உதவி

805 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.அழகுமலை (இரண்டாம் நிலைக் காவலர்) அவர்கள் கடந்த 17.12.2020-ம் தேதி பணியிலிருந்த போது திடீரென […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452