நிறைவு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட SP வாழ்த்து

Admin

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கவாத்து மைதானத்தில் 40 ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி முடிவடைந்து (Passing out parade) இன்று (29.01.2021) நடைபெற்ற நிறைவு விழா அணிவகுப்பு மரியாதையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஏற்றுக் கொண்டு, ஊர்க்காவல் படையினரின் பணி சிறக்க வாழ்த்தி பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 40 பணியிடங்களுக்கு 40 பேர் சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டு, அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் கடந்த 01.12.2021 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (29.01.2021) நிறைவு பெற்றது. இந்தப் பயிற்சியானது அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 45 நாட்கள் தினமும் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி நிறைவு நாளான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வளாக மைதானத்தில் கவாத்து அணிவகுப்பு திரு. கருப்பசாமி என்பவர் தலைமையில் 40 படை வீரர்கள் கொண்ட ஊர்க்காவல் படையினர் மிகச் சீரிய முறையில் அணிவகுத்து சென்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தி நிறைவு செய்தனர்.

இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், நீங்கள் அனைவரும் 45 நாட்களில் இவ்வாறு சிறந்த முறையில் கவாத்து பயிற்சி பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரியது, குறுகிய காலத்தில் நீங்கள் நல்லமுறையில் பயிற்சி பெற்றிருப்பது ஊர்க்காவல் படையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுகிறது. சீருடையணிந்து சமுதாயத்திற்கு நன்மைகள் செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணிபுரிவதை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் அனைவரின் பங்களிப்பும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நன்மையளிப்பதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றும், உங்கள் பணி சிறக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

இப்பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, ஊர்க்காவல்படை வட்டார தளபதி திரு. பாலமுருகன், துணை வட்டார தளபதி திருமதி. கெசல்யா, ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சியளித்த உதவி ஆய்வாளர் திரு. நடராஜன், திரு. செல்வக்குமார் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மனித நேய வார விழாவை சிறப்பித்த கோவை SP

523 கோவை : கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்ட காவல் துறை இணைந்து மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை ஒழிப்பு மனித நேய வார விழா […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452