தொழில் அதிபரிடம் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

Prakash

கோவை: கோவை விமான நிலையம் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஒரு பயணியின் பேக்கில் துப்பாக்கியில் பயன்படுத்தும் 92 குண்டுகள் இருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்பூரை சேர்ந்த சசிக்குமார் (40) என்பதும், அவரது பேக்கில் கைத்துப்பாக் கியில் பயன்படுத்தும் 92 குண்டுகள் இருந்ததும் தெரிய வந்தது.

உடனே அந்த துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்து பீளமேடு போலீசாரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

விசாரணையில், சசிக்குமார் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தும் தொழில் அதிபர் என்பதும், சென்னை செல்லும் அவசரத்தில் பேக்கில் துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கோவை விமான நிலையத்துக்கு தொழில் அதிபர் துப்பாக்கி குண்டுகளுடன் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பூட்டை உடைத்து 60 பவுன் திருட்டு

294 கோவை: கோவை கருப்பராயன்பாளையம், ராமசாமி நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ் 45. இவா் ராவத்தூா் பிரிவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். இவா் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!