தேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்

Prakash

தேனியில் :  தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு சார்பாக முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக காவல்துறை வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தேனி காமராஜர் பேருந்து நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான மதுரை சாலைஇ மார்கெட் பகுதிக்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களைவழங்கினார் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கூறினார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் மாவட்டத்தில் காவல்துறை சார்பாக 50 க்கு மேற்பட்ட வாகனங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும். இதுவரை முகக்கவசம் அணியாத 8 ஆயிரம் நபர்களுக்கு காவல்துறை சார்பாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வரதட்சணை! கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்

314 திருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452