சென்னை: அரசு மற்றும் தனியார் கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கம் சென்னை, கீழ்ப்பாக்கம் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னயிலுள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள், நிர்வாகப் பணியாளர்கள், மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட சுமார் 100 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். சி. சைலேந்திர பாபு, இ.கா.ப (இயக்குநர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை) அவர்கள் தீ பாதுகாப்பு குறித்த அவசியத்தை விளக்கினார். இதனையடுத்து கூடுதல் இயக்குநர் (செயலாக்கம் & பயிற்சி) திரு. எஸ். விஜயசேகர் மற்றும் வட மண்டல இணை இயக்குநர் திருமதி. ப்ரியா ரவிச்சந்திரன் ஆகியோர் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்