தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்பு தப்பியது

Admin

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் காவல் நிலையம் பின்புறம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகள் வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காகவும் கால்நடை தீவனத்திற்காகவும் கேரளா மற்றும் உள்ளுர் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் தங்கள் வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு திவனத்திற்காக சேமித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று சுந்தரம்பிள்ளை ஆறுமுகம் சீதாராமன் உள்ளிட்ட 3 பேரின் 6 வைக்கோல் படப்புகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு மளமளவென தீ எரிந்தது தகவல் அறிந்து இராஜபாளையம் தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்புத் துறையினரின் துரித செயல்பாட்டால் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் படப்புகள் தீயிக்கு இரையாகமல் தப்பியது. வைக்கோல் படப்பு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மனைவியை தாக்கி காயப்படுத்தியவர் கைது.

308 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவியை மரக்கட்டையால் தாக்கி காயப்படுத்திய அவரது கணவர் நாகராஜன் என்பவரை […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452