திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம

Admin

மதுரை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகளின்படி நகர் பகுதிகளில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது.கிராமப்புற பகுதிகளிலும் தனியார் கட்டிட சுவர்களில் கட்டிட உரிமையாளர்களின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகளின் மாநாடு, தலைவர்களின் பிறந்தநாள், கட்சி விழாக்கள் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சுவர் விளம்பரங்கள் செய்துவந்த நிலையில். பாலங்களின் தடுப்புச் சுவர்கள், சாலையின் மையத் தடுப்புச்சுவர்கள், அரசு கட்டிடங்கள் என பல இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு இருந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் திருப்பரங்குன்றம் தொகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், மதுரை நகர் பகுதிகளில் பல இடங்களில் சுவரில் வரையப்பட்ட சின்னங்கள், கல்வெட்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருப்பரங்குன்றத்தில் தீ விபத்து, போலீசார் வழக்குப் பதிவு

534 மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே தனியார் திருமண மஹாலில் பணிபுவர் மொட்டை மாடியில் 27 வயது மகளுடன் தங்கி இருந்து […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452