திருப்பரங்குன்றத்தில் தீ விபத்து, போலீசார் வழக்குப் பதிவு

Admin

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே தனியார் திருமண மஹாலில் பணிபுவர் மொட்டை மாடியில் 27 வயது மகளுடன் தங்கி இருந்து வேலை செய்து வந்த விதவைப் பெண்மணி ஜெயலட்சுமி. (வயது 54.)கணவர் பெயர் பால்ராஜ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில் அங்கிருக்கும் தனியார் கல்யாண மண்டபம் மாடியில் மகளுடன் வசித்து வந்தார்
நேற்று இரவு 8.00 மணி அளவில், மகள் கடைக்குச் சென்றிருந்த நிலையில், சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைக்க கேஸ் சிலிண்டரை திறந்த போது, ஏற்கனவே கேஸ் குழாயில் ஏற்பட்டிருந்த கசிவின் காரணமாக,  எலக்ட்ரிக் ஸ்விட்ச் போர்டில் மின் கசிவு ஏற்பட்டு நடந்த தீ விபத்தில் ஜெயலட்சுமிக்கு தீக்காயம் ஏற்பட்டது.

ஜெயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த மஹாலில் இருந்தோர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து
தீக்காயங்களுடன் கொண்டிருந்த ஜெயலட்சுமியை ஆட்டோ மூலமாக மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முருகன் சிலை உடைப்பு, காவல்துறை செயலினால் பொதுமக்கள் அமைதி

306 விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452