திருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்

Admin
சென்னை : சென்னை, சைதாப்பேட்டை, பஜார் ரோட்டில் குமரன் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக்கடை நடத்தி வரும் குமரன் , வ / 52 , என்பவர் கடந்த 14.01.2021 அன்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்று மறுநாள் ( 15.01.2021 ) காலை பார்த்தபோது , அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு , கல்லாவில் இருந்த பணம் ரூ. 4,000/ – திருடு போயிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், குமரன் J – 1 சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் , வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
J – 1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதில் தெரிந்த குற்றவாளியின் அடையாளங்களை வைத்து விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு அருண்குமார் ( எ ) பிங்கி , வ / 21 ஆதம்பாக்கம் என்பவரை நேற்று ( 25.01.2021 ) கைது செய்தனர்.
விசாரணையில் குற்றவாளி அருண்குமார் ( எ ) பிங்கி, சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லையில் ஒரு மருந்து கடையின் பூட்டை உடைத்து திருடியதும் , செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும், R – 6 குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் , 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடியதும், J – 7 வேளச்சேரி காவல் நிலைய எல்லையில் 2 இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. அதன்பேரில் , குற்றவாளியிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் ( Duke & Pulsar ) மற்றும் 1 செல்போன் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளி அருண்குமார் ( எ ) பிங்கி மீது ஏற்கனவே கோட்டூர்புரம், ஆவடி, ஆதம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது . விசாரணைக்குப் பின்னர் குற்றவாளி அருண்குமார் ( எ ) பிங்கி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை

800 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 26.01.2021- ம் தேதி செவ்வாய்க்கிழமை நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452