திண்டுக்கல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஜல்லிக்கட்டு

Admin

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் திமிரும் காளைகளை உற்சாகத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். கோட்டாட்சியர் உஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் கிழக்கு வட்டாட்சியர் சரவணன்,வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், நத்தம் தொகுதி எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்,வி கண்ணன், ஜெயலலிதா பேரவை கிழக்கு மாவட்ட செயலாளர் முகமது யூசுப் அன்சாரி, அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயசீலன்,திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், துணைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கால்நடை இணை இயக்குனர் முருகன்,உதவி இயக்குநர் ஆறுமுக ராஜ்,டாக்டர் ராஜேஷ் குமார்,ஆய்வாளர் பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் காளைகளை பரிசோதனை செய்தனர். ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிவசுப்பிரமணியன், பிரித்திவிராஜ் தலைமையிலான குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரன்,ஆறுமுகம் தலைமையில் ஆய்வாளர்கள் தெய்வம்,ரமேஷ் குமார், ஜெயச்சந்திரன், சங்கரேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
 
 
 
 
 
 
 
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திண்டுக்கல் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்ச்சி

241 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452