திண்டுக்கல் அருகே நடந்த விபத்தில் 4பேர் பலி

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே அரசு பஸ்சும் தனியார் மில் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி பிரிவு என்னும் இடத்தில் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இன்று காலை 9:30மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிஅரசு பேருந்தும் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட உத்தப்பநாயக்கனூர் இருந்து பட்டிவீரன்பட்டி நூற்பாலை மில் வேனும் ஆட்களை ஏற்றி வந்து கொண்டிருந்தது. வத்தலகுண்டு சேவுகம்பட்டி அருகே இரண்டும் நேருக்கு நேர் நிலை தடுமாறி இரண்டும் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வத்தலகுண்டு வேன் டிரைவர் சுரேஷ்,,21இதே பகுதியைச் சேர்ந்த சுகுனா 46,லதா,35, உத்தப்பநாயக்கனூர் ஊரைச் சேர்ந்த காளிதாஸ் 25, ஆகியோர் பலியாகினர். இந்த விபத்தில் உத்தப்பநாயக்கனூர் ஊரைச் சேர்ந்த முருகேஸ்வரி,25, ராஜேஸ்வரி 30,ரம்யா25, லாவண்யா உட்பட 26 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் மதுரை மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை அருகே திருமண ஏக்கத்தில் விவசாயி தற்கொலை

279 கோவை : கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புத்தூர் வரதராஜர் தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது 34 விவசாயி இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452