தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளியில் காவல்துறை சோதனைச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டு, போடி மெட்டு, கம்பமெட்டிலும் கூடுதலாக மத்தியதொழில் பாதுகாப்பு போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் ஏப்.6 ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது, இதனை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் நிர்வாகம், எல்லைப் பகுதியில் சோதனையை பலப்படுத்த முடிவு செய்தது.
அதன் முதல் கட்டமாக குமுளியில் எல்லைப்பகுதியிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியில் இருந்த காவல்துறை சோதனைச்சாவடி மையப்பகுதித்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்த புறக்காவல்நிலையமும், காவல் துறை சோதனைச்சாவடியும் ஒன்றாக இயங்கும். ஏற்கனவே புறக்காவல் நிலையம் மற்றும் சோதனைச்சாவடியில் பணியாற்றிய போலீசாருடன்கூடுதலாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு போலீசார் சோதனைச்சாவடி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல் தமிழக எல்லை கம்பமெட்டு, போடி மெட்டு ஆகிய சோதனைச்சாவடிகளிலும் கூடுதலாக மத்தியதொழிற்சாலை பாதுகாப்பு போலீசார் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்றுஷிப்ட் முறையில் தமிழக, மத்திய போலீசார் சோதனைச்சாவடி பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.குருசாமி